இரண்டு மாதத்திற்கு முன்... முதல் முதலாக சம்பளம் வந்த விஷயத்தை அப்பாவிடம் கூறினேன், அவரோ “ரொம்ப சந்தோஷம்மா பணத்தை சிக்கனமா செலவு பண்ணனும்”என்றார். கார்பரேட் கம்பெனி வேலை,முதல் சம்பளம் வேற மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு, சரி முதல் சம்பளம் வாங்கியிருக்கோம் அப்பா அம்மாவுக்கு துணி எடுக்கணும் அப்புறம்..ன்னு யோசிச்சு ஒரு சின்ன லிஸ்ட் போட்டேன். பிறகு எனக்கும் ஏதாவது வாங்கனும்ன்னு யோசிச்சு வைத்தேன். ...
அந்த வார கடைசியில் சக அலுவலக தோழி என்னிடம் வந்து ஒரு பிரபல பிராண்டட் காலணி கம்பெனி 50% முதல் 60% வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறார்கள் ஹேன்ட் பேக் கூட விற்ப்பனைக்கு இருக்கும், பிராண்டட் பொருட்களை உபயோகித்து பழகு நல்லா இருக்கும் என கூறினாள். சக அலுவலர்கள் அனைவரும் அங்கே செல்வதாக கூறி என்னையும் அழைத்து சென்றாள் (ஆம் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த கம்பெனி பிராண்டட் பொருட்கள் விலை அதிகம்தான்) அங்கு சென்றதும்தான் தெரிந்தது ஆயிரங்களில் விற்கப்படும் பொருட்கள் சில நூறுகளில் கிடைப்பது. நாமும் ஒரு காலணி வாங்கலாம் என நினைத்து பார்த்துகொண்டிருந்தேன், பிடித்தமான ஒரு ஜோடி காலணியின் உண்மையான விலையை பார்த்தது அதிர்ந்தேன்( நான் இதுவரைக்கு எடுத்த காலணியின் அதிகபட்ச விலையை விட ஐந்து மடங்கு அதிகம்) 60% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது என நானும் என் தோழியும் வாங்கினோம்.(பணத்தையும் சிக்கனமாக செலவு செய்தாயிற்று அதே நேரம் பிராண்டட் காலணியும் வாங்கியாயிற்று என ரொம்ப புத்திசாலித்தனமாக நினைத்துகொண்டேன்)
இரண்டு வாரங்களுக்கு பின்.., அன்று எனக்கு லேசாக முதுகுவலியுடன் சேர்ந்து கால்வலியும் இருந்தது ஒருவேளை அலுவலகத்தில் அமர்ந்தே இருப்பதால் இருக்கும் என நினைத்து வலி நிவாரணி கிரீம் வாங்கி உபயோகித்து அந்த வாரம் சாமளிதேன் பின் வலி அதிகமானதும் என் தோழியிடம் கூறினேன் அவளோ “சேம் பிளட்” என்றாள் நக்கலாக (பாவம் ஒரு வாரமாக அவளும் போராடியிருக்கிறாள்) “சரி சாயங்காலம் அருகில் இருக்கும் டாக்டரிடம் செல்லலாம்” என கூற அவளோ மறுத்து ஊரில் மிகபெரிய நெட்வொர்க் மருத்துவமனைக்கு கூட்டி சென்றாள் (ஹே..வீ ஆர் கார்பரேட் பீப்புள் யா என்பது போல தோன்றியது) அங்கு சென்றதும் 3 வகையான எக்ஸ்ரே (X-Ray) எடுக்க சொன்னார்கள், டாக்டர் எக்ஸ்ரேயில் இருவருக்கும் எந்த பிரச்சனை இல்லையே என கூறி சில வலி நிவாரணி மாத்திரைகளை எழுதி கொடுத்தார். அப்பாடா மருத்துவரிடம் சென்று மாத்திரை வாங்கி சாபிட்டாயாயிற்று நாளை முதல் வலி இருக்காது என நினைத்து தூங்கினேன்.
காலை கண் விழித்தால் வலி அப்படியே இருந்தது(முடியல).அன்று மாலை அருகில் உள்ள பிசியோதெரபிஸ்ட்டிடம் சென்று நடந்ததை கூறினேன் அவர் “சமீபத்தில் காலணியை மாற்றினீர்களா?” என கேட்டார் (அந்த ஆஃபர்ல வாங்குறப்போ பார்த்திருப்பாங்களோ என நினைத்தேன்) “ஆம்” என் கூறினேன் பின் காலணியை பார்த்துவிட்டு “அளவு சற்று குறைவாக இருக்கிறது, சரியாக குதியங்காலை ஊன்றி நடக்க முடியாத காரணத்தால்தான் அந்த வலி ஏற்ப்பட்டுள்ளது. சரியான அளவுள்ள காலணியை பயன்படுத்துங்கள்” என கூறினார்.
அப்பொழுதுதான் எனக்கு தெரிந்தது மருத்துவத்திற்கு செய்த செலவிற்கு பதிலாக (3 X-Ray + டாக்டர் ஃபீஸ்) தள்ளுபடி இல்லாமலே அந்த குறிப்பிட்ட பிராண்டட் காலணி 3 ஜோடி வாங்கியிருக்கலாம், மேலும் “பிரபல பிராண்டட் பொருட்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறதென்றால் கண்டிப்பாக அதில் ஏதாவது குறை இருக்கும், சிக்கனம் என்ற பெயரில் சரியான பொருளை வாங்காவிட்டால் இப்படி வீண் செலவு ஏற்படுவதுடன் உடல் நலத்திற்கும் கேடு என நினைத்தேன்”
இதைதான் பெரியவர்கள் “வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு” என கூறினார்கள்

Nalla seithi thozhi... Nanrigal pala
ReplyDelete