Tuesday, 21 May 2013

ஒப்பீடு

சென்ற வாரம் ஒரு குடும்பத்துடன் ஹோட்டலுக்கு சென்றிருந்தோம், தேவையான உணவை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தோம், அப்போது அங்கே ஒரு 70 வயது மதிப்புடைய பெரியவர் வந்து அமர்ந்ததை கவனித்துகொண்டிருந்தேன், அருகில் சென்ற சர்வர் மெனு கார்டை எடுத்து நீட்டினார்.

வாங்கி பார்த்துவிட்டு அருகில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவரிடம் மெனு கார்டை நீட்டி படித்து சொல்ல கேட்டார்.
அதை வாங்கி பார்த்துவிட்டு திருப்பி கொடுத்த அந்த நபர். "உங்களைப் போலவே எனக்கும் படிக்கத் தெரியாது" என்று கூறி எழுந்து சென்றார்.

இதை கவனித்த நான் அருகில் சென்று படித்து கூறினேன், உடனே அவர் ஆங்கிலத்தில் "தன்னுடைய மூக்கு கண்ணாடியை வீட்டில் வைத்துவிட்டு வந்துதால் படிக்க இயலவில்லை" என்றும் தான் ஒரு ஓய்வுபெற்ற தலைமை கல்வி அதிகாரி எனவும் கூறினார்.

இப்படிதான் ஒரு சிலர் தன்னுடைய குறையை ஒப்புக்கொள்ளாமல் அடுத்தவருடைய குறையுடன் ஒப்பிட்டு கூறுவார்கள்.   

2 comments:

  1. மிக யதார்த்தமான நடை... வாழ்த்துக்கள்... தொடரட்டும்...

    ReplyDelete
  2. Super....
    athairku neega enna soneega....

    ReplyDelete