உயர்திரு தொழில்நுட்ப பொறியாளர் அவர்களுக்கு,
நான் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தங்களுடைய நிறுவனத்தின் சொகுசு கார் ஒன்றை வாங்கினேன், நல்ல திறன்,வேகம்,இடவசதி,மைலேஜ் என நான் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கிறது, என்னுடைய பிரச்சனை என்னவென்றால் நான் வாரக்கடைசியை கொண்டாட குடும்பத்துடன் எனது பண்ணை வீட்டிற்கு செல்வது வழக்கம், இரவில் சாப்பிட்டு முடித்தவுடன் அருகில் மலை மீது இருக்கும் கடைக்கு காரில் சென்று சாக்லேட் வாங்கி வருவேன். நான் ஒவ்வொரு முறையும் “ஒரு குறிப்பிட்ட வகை சாக்லேட்” வாங்கும் போது மட்டும் கார் ஸ்டார்ட் ஆக மறுக்கிறது வேறு எந்த வகை சாக்லேட் வாங்கினாலும் ஸ்டார்ட் ஆகிறது.
எனவே உங்களுடைய மெக்கானிக் குழுவை அனுப்பி என்னுடையை காரின் பழுதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
இப்படிக்கு
கார் உரிமையாளர்
மேலே உள்ள கடிதத்தை படித்ததும் நமக்கு தோன்றுவது “ஆட்டோ கண்ணாடிக்கும் வண்டி ஸ்டார்ட் ஆக மறுப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது” என்ற காமெடிதான் ஞாயபகத்திற்கு வரும்.
ஒரு பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் ஆண்டிற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்களையே தயாரிக்கும். இப்படிப்பட்ட நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவுக்கு வந்ததுதான் மேலே படித்த அந்த கடிதம். கடிதத்தை படித்த அந்த பொறியாளருக்கு கோவமாகவும் இருந்தது அதேசமையம் நகைச்சுவையாகவும் இருந்தது. என்னடா இப்படி கொஞ்சம் கூட லாஜிக் இல்லாம புகார் வந்திருக்கே என சலித்துகொண்டும் அதை கிடப்பில் போடாமல் (நல்லவேளை) மெக்கானிக் துறைக்கு அனுப்பினார்.
கடிதத்தை வாங்கிய மெக்கானிக் துறை பொறியாளருக்கும் அதே காமெடி ஞாயபகம் வந்தது “கண்ணாடிய திருப்பினா வண்டி ஓடும்னு சொன்னத விட இது புதுசா இல்ல இருக்கு”ன்னு நினைச்சிட்டு தன குழு உறுப்பினர் ஒருவரிடம் கடிதத்தை காட்டி அந்த காரை எடுத்துட்டு வந்து சர்வீஸ் செய்து அனுப்ப உத்தரவிட்டார். அந்த மெக்கானிக் அந்த கடிதத்தை வாங்கி படித்தார் உடனே தன் மேலதிகாரியான அந்த மெக்கானிக் துறை பொறியாளரிடம் “சார் கண்டிப்பா நம்ம கார்ல ஏதோ பிரச்னை இருக்கு நாம அதை எப்படியாவது சரி பண்ணனும் எனக்கு அனுமதி கொடுங்க நான் நேர்ல போய் பார்த்துட்டு வர்றேன்” என கேட்க அவரோ சிரித்தபடி “என்ன?? அந்த கார் உரிமையாளர்தான் ஏதோ லாஜிக் இல்லாம கடிதம் போடுறார் அதை படிச்சிட்டு நீயும் இப்படி கேட்கிற” என கூறி வேண்டா வெறுப்பாக அனுமதியளித்தார்.
தனக்கு அனுமதி கிடைத்ததும் அந்த மெக்கானிக் நேராக அந்த கார் உரிமையாளரிடம் வந்து தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு, “இந்தமுறை நானும் உங்களுடன் வார விடுமுறைக்கு வருகிறேன், நாம் கூட இரண்டு நாட்கள் தங்க வேண்டும்” என்றார். “சரி போகலாம்” என்றதும் குடும்பத்துடன் கிளம்பினார்கள்.
முதல் நாள் இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு சாக்லேட் வாங்க கிளம்பினார்கள். இருவரும் சென்று அந்த கடையில் எப்பொழுதும் வாங்கும் வகையை வாங்கி வந்து காரை ஸ்டார்ட் செய்தவுடன் ஸ்டார்ட் ஆனது, மறுநாளும் இதே மாதிரி இரவு சாப்பிட்டவுடன் சாக்லேட் வாங்க கிளம்பினார்கள் இந்தமுறை அந்த (கடிதத்தில்) குறிப்பிட்ட வகை சாக்லேட்டை வாங்கி வந்து காரை ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆகவில்லை, இதை பார்த்த அந்த மெக்கானிக் அதிர்ச்சியானார். (தலைவர் படிக்காதவன்ல சொல்ற மாதிரி “லட்சுமி ஸ்டார்ட் ஆகிடு”ன்னு கூட சொல்லி பார்த்தார் அப்பாவும் ஒன்னும் ஆகலை) அப்புறம் எப்படியோ ஒருவழியாக இன்ஜினை ஏதோ செய்து ஸ்டார்ட் செய்துவிட்டார். இரவில் அந்த மெக்கானிக் தூங்காமல் கடந்த இரண்டு நாட்களாக சாக்லேட் கடைக்கு சென்றுவந்த நிகழ்வுகளையே திரும்ப திரும்ப யோசித்துக் கொண்டிருந்தார், பின் தூங்கி போனார். கலை எழுந்ததும் அந்த மெக்கானிக் பயங்கர உற்சாகமாக காணப்பட்டார் இதை கண்ட அந்த கார் உரிமையாளர் ‘இந்த பயலுக்கு என்ன ஆச்சு?’ என யோசித்துக்கொண்டிருக்கையில் அந்த மெக்கானிக் வந்து “சார், நாம இப்போ சாக்லேட் வாங்க கடைக்கு போகலாம்” என்றதும் உடனே கிளம்பினார்கள். கடைக்கு சென்று அந்த பிரச்சனைக்குரியதாக கருதப்படும் அந்த சாக்லேட்டை வாங்கினார்கள், வந்து வண்டியை ஸ்டார்ட் செய்தால் ஸ்டார் ஆனது. அந்த கார் உரிமையாளருக்கு பயங்கர சந்தோஷம் “எப்படி? என்ன ஆச்சு?” என கேட்க, “ஒன்றுமில்லை சார் சின்ன பிரச்சனை வண்டியை எடுத்துட்டு போய் இரண்டு வாரத்தில் சரிசெய்து கொடுக்கிறோம்” என கூறி வண்டியுடன் புறப்பட்டார்
நிறுவனத்திற்கு வந்தவுடன் தன் துறை பொறியாளரிடமும்,தொழில்நுட்ப பிரிவு பொறியாளரிடமும் பிரச்சனையை விளக்கினார். “அந்த காரின் உரிமையாளர் தன் வாரகடைசியை கொண்டாட மலைஅடிவாரத்திற்கு செல்கிறார் அங்கு குளிர் கிடையாது ஆனால் அவர் சாக்லேட் வாங்க மலைப்பகுதிக்கு செல்கிறார் அங்கு கடும் குளிர் நிலவுகிறது, இதனால் இஞ்சின் ஆயில் உறையவும், செல்ஃப் ஸ்டார்ட் தடைபடவும் அதிக வாய்ப்பு உள்ளது” என்று கூற அந்த மெக்கானிக் பொறியாளரோ “சரி நம் முக்கிய பிரச்சனையான அந்த சாக்லேட் மேட்டருக்கு வாங்க” அதற்கு அந்த மெக்கானிக் “பெரும்பாலும் கடைக்காரர்கள் எந்த பொருள் அதிக விற்பனையாகிறதோ அதை முன்னாடியே வைத்த்திருபர்கள் அதுபோல அவர் வாங்கும் அந்த குறிப்பிட்ட வகை சாக்லேட்டை (காரின் பிரச்சனைக்குரியது) மற்றவர்கள் அதிகம் விரும்புவது கிடையாது எனவே அந்த கடைக்காரர் குளிர்பதன பெட்டியின் அடியில் வைத்திருப்பார் எடுக்க சிறிது நேரமாகும் இந்த நேரத்தில் இஞ்சின் ஆயில் உறைகிறது, செல்ஃப் மோட்டாரும் பிரச்சனை செய்கிறது மற்ற வகையை வாங்கும்போது உடனே அவர் திரும்பி வந்துவிடுவதால் பிரச்னை ஏற்ப்படுவதில்லை” என கூறி தன்னுடைய விளக்கத்தை கூறினார். இதை கேட்டு ஆச்சர்யப்பட்ட அந்த மெக்கானிக் வல்லுனரும் தொழில்நுட்ப பொறியாளரும் பாராட்டி மகிழ்ந்தனர் மேலும் அந்த கம்பெனி இதற்குமுன்னர் தயாரித்த அத்தனை கார்களையும் திரும்ப பெற்று இந்த கோளாறு வராமல் சரிசெய்து கொடுத்தனர்.
“நிறைகளை நண்பர்களிடத்திலும் குறைகளை எங்களிடத்திலும் சொல்லுங்கள்” என்பது எழுத்தளவில் இல்லாமல் எந்த புகார் வந்தாலும் அதற்கு தனிக்கவனம் செலுத்தி தீர்க்கவேண்டும். ஏனெனில்
“வாடிக்கையாளரே கடவுள்”