Wednesday, 28 August 2013

Mr.தாய்மாமன்

ஒவ்வொருத்தருக்கும் தங்களோட அம்மா வீட்டு சொந்தத்தை கலாய்ப்பதில் ஒரு மகிழ்ச்சி இருக்கும்  குறிப்பா தாய்மாமன கலாய்க்கிறது. என்ன மிஞ்சி போனா “கஞ்சன், கருமி, செலவு செய்யாதவர், எப்போ பார்த்தாலும் கைல காசு இல்லைன்னு சொல்றார் “இப்படிதான் கலாய்ப்பாங்க., அப்படிதாங்க என் தாய்மாமனும் ஆனால் அதை கொஞ்சம் வித்தியாசமான முறையில் யோசிச்சு செய்யக்கூடிய மூளைக்காரர்.
 
எப்படின்னா, நண்பர்களோட எங்கேயாவது வெளில கிளம்பும்போது சட்டை பாக்கெட்ல ஒரு 100 ரூபாய் நோட்டை மட்டும் எடுத்து வைத்துக்கொள்வார் கூடவே ஒரு தேளையையும் எடுத்து சட்டை பாக்கெட்ல போட்டுக்கொள்வார்.  தேள் எதுக்குன்னு கேட்குறீங்களா? பாக்கெட்ல பணம் இருக்குன்னு வெளில தெரியனும் ஆனா செலவு செய்ய பணத்தை எடுத்தா தேள் கொட்டிடும் அதனால மறந்தும் பணத்தை எடுக்க மாட்டார்.
 
அதே மாதிரித்தான் ஏதாவது விஷேசத்துக்கு போனோம்னு வைங்க சாப்பாட்டு பந்தில எவ்வளவு கும்பல் இருந்தாலும் நமக்கு முன்னாடி போய் உட்கார்ந்து சாப்பிட்டுடுவார் (அந்த தொழில் ரகசியதை யாரும்  கண்டுபிடிக்க முடியாது)
 
இதுக்கும் மேல, இதையெல்லாம் சொல்லி கலாய்ச்சாலும் யாரையோ சொல்லுற மாதிரி  கண்டுக்காம இருப்பாங்க (குத்து மதிப்பா சொல்லனும்னா "எருமை மாட்டு மேல மழை பெய்த மாதிரி)  அதுதான் அவங்க ஸ்பெஸாலிட்டியே ..!
 
 

1 comment: