விடுமுறையில் வீடிற்கு வந்த ஞாயிற்றுக்கிழமை சாயுங்காலம் மட்டும் மனதிற்குள் ஒரு சின்ன கவலை ஒட்டிக்கொள்ளும் “இரவு கிளம்பவேண்டுமே” என்றுதான், அன்றும் அப்படிதான் இருந்தது வேறு வழி இல்லையே.! ஊரிலிருந்து புறப்படுவதற்கு முன் தேவையான சில பொருட்களை வாங்க ஒரு சின்ன டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் உள்ளே நுழைந்தேன்.
பொருட்களை வாங்கி பில் போட்டுவிட்டு பில் அமௌன்ட்டை பார்த்தேன் 196 என இருந்தது. பில்லை வாங்கிக்கொண்டு கேஷியரிடம் சென்று இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை நீட்டினேன், அதை வாங்கிக்கொண்டு “ஒரு ரூபாய் சில்லறை இருந்தா கொடுங்க” என்றார். நானும் என்னிடமிருந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து நீட்டினேன் (5 ரூபாயா திருப்பி தருவார் போல) அதற்க்கு அவர் “சில்லறை இல்லைங்க அதான்” என்று சொல்லி ஒரு 5 ரூபாய் சாக்லேட்டை எடுத்து நீட்டினார். வேறு வழியின்றி வாங்கிகொண்டு வீட்டுக்கு வந்தேன் (ஃபேஸ்புக்ல இதை போட்டு நியாயம் கேட்பேன் என நினைத்துக்கொண்டு ‘கன்ஸ்யூமர் கோர்ட்ல போட்டு நியாயம் கேட்பேன்’ என்று சொன்னது அந்த காலம்).
அப்போ டிவில வந்த “என்னங்கடா இது.! உங்க ஆட்டைல புது ரகமா இருக்கு.!! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க” வசனம் நான் சொல்ல வேண்டிய வசனம் மாதிரியே இருந்துச்சு.