Friday, 21 June 2013

நல்லா கேட்குறாங்கய்யா டீட்டெயிலு

பக்கத்துக்கு வீட்டு அண்ணன் மகள் "மகதி" (Magathi)  செம சுட்டி, எடக்குமடக்கா கேள்வி கேட்கிறதுல ரொம்ப கெட்டிகாரி, கடந்த மாதம் ஊர் மாரியம்மன் திருவிழாவில் அவளுக்கு மொட்டையடிக்க அமராவதி ஆற்றுக்கு குடும்பத்தோடு சென்றிருந்தோம். மொட்டையடிக்கையில் அழாமல் இருக்க கடைவீதியில் கை நீட்டி கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்தோம். கடைசியில் அவள் வேலையை காட்ட ஆரம்பிச்சா மொட்டையடிக்க உட்காரமாட்டேன் என்று அழுது எனக்காக வாங்கிய (வடை போச்சே..)  இரண்டு “டெய்ரிமில்க்” சாக்லேட் கொடுத்து (இதற்குதான் ஆசைப்பட்டாய் பாலகுமாரி) சமாதானபடுத்தி ஒரு வழியாக மொட்டையடித்து கோவில் சென்று வீட்டுக்கு வந்தோம். அப்போ அவளுடைய தத்தா (அம்மாவின் அப்பா) வந்திருந்ததை  கண்ட அவள் அண்ணியிடம் “அம்மா தத்தா ஏன் பாதி தலை மட்டும் மொட்டை அடிச்சுட்டு வந்திருக்கார்?” என கேட்க, அங்கே இருந்தவர்கள் என்ன பதில் சொல்வதென தெரியாமல் இருக்க திரும்ப திரும்ப கேட்க ஆரம்பித்தாள். நான் இடையில் புகுந்து “அது ஒண்ணுமில்லை சாமி, உன்னை மாதிரியே தாத்தாவும் மொட்டை அடிச்சுக்க உட்காரமாட்டேன்ன்னு அடம் பிடிச்சார், அதுனால பாதிலயே எழுந்து வந்துட்டார்”னு சொல்லி சமாளித்தேன்.
 
எப்படியெல்லாம் யோசிச்சு கேட்குதுக..!!

Saturday, 1 June 2013

போய் சேருமிடம்

ஒருவர் அவசர அவசரமாக ஓடி வந்து ஆட்டோவில் ஏறி டிரைவரிடம் “கொஞ்சம் வேகமா போங்க” என்றார். ஆட்டோ டிரைவரோ “சரிங்க எங்க போகணும்” என்று கேட்க அதற்கு அவர் “அதெல்லாம் உனக்கு தேவையில்லாத விஷயம், நான் எங்க போனா உனக்கென்ன? நீ வேகமா போ” என்றார். இப்படிதான் ஊர்ல நிறைய பேர் இதுதான் தங்களோட குறிக்கோள் அல்லது லட்சியம்ன்னு (சேருகிற இடம்) தெரியாமையே இருக்காங்க.